Thamizh Kavithaigal
Friday, 9 March 2012
பூ
பூவே...
நீ வாழ்வது ஒரு நாள்
மறைவது மறுநாள் - அந்த
ஒருநாளில்
உலகமே உன் பின்னால்...
--
சவிதா குமார், சித்தார்.
தோழி
இன்றும் ஸ்பரிசிக்கிறேன் அவள் நேசத்தை
நேசத்தை மட்டும் !
தோழி என்ற ஒற்றை வார்த்தையால்......
--
சரண்யா மணி, புத்தூர்.
இளைய சமுதாயம்
இன்றைய இளைஞர்களின்
நாட்டைப் பற்றிய சிந்திப்பு
இரண்டு நிமிடங்கள் -சிக்னலில்
காத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே...
--
சரண்யா மணி, புத்தூர்.
நிலா
பௌர்ணமி ஒளியில்
வெள்ளை ஆடை உடுத்தி
யாருக்காக காத்திருக்கிறாள் - இந்த
இயற்கை மகள்...
--
மரகதம் நடராஜன், மேட்டுப்புதூர்.
தாய்
காகிதத்திற்கு எல்லை வரைந்து
எண்ணங்களை சிறை பிடிக்காமல்
காற்றில் மிதக்க விடுகிறேன் என் ஆதங்கங்களை!
என் கண்ணில் கரைந்த உன்னை- இன்று
கண்ணீரில் காண்கிறேன்
என்றும் உன் கல்(கரு)அறையில் மகளாக .......
--
சரண்யா மணி, புத்தூர்.
பெண்
பெண்ணும் நகத்தை போலத்தான்
அடங்கி இருக்கும்போது அலங்கரிக்கப்படுகிறாள்
அளவு மீறும்போது வெட்டி எரியப்படுகிறாள்...
முட்டுக்கட்டை
கடும்பகை சிங்களத்தை வேரறுக்க
நீண்ட நெடும்பகை இந்தியமே முட்டுக்கட்டை...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)